
ஹாலிவுட் திரையுலகின் ரசிகர்களே மிக ஆர்வமாக எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் உலகம் முழுவதுமே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
உலக அளவில் இந்த படம் நேற்றுடன் 2.18 பில்லியன் டாலர் வசூல் செய்து உலகில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் 22 ஆண்டுகளாக இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இரண்டே வாரத்தில் தூக்கியெறிந்துள்ளது . டைட்டானிக் திரைப்படம் 2.17 பில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலக அளவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் நிலவரம்
1. வட அமெரிக்கா – $619 Million
2. சீனா – $575 Million
3. இங்கிலாந்து – $90 Million
4. கொரியா – $82 Million
5. மெக்ஸிகோ – $62 Million
6. பிரேசில் – $56 Million
7. இந்தியா – $52 Million





