Spotlightதமிழ்நாடு

3 எம்.எல்.ஏ கள் தகுதி நீக்கம்; இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக எம் எல் ஏ-க்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை எதிர்த்து அதில் இரண்டு எம் எல் ஏ-கள் உசநீதிமன்றத்தில் முறையிட்டனர். உச்சநீதிமன்றம் இன்று அந்த நோட்டீஸ்க்கு இடைக்காலத்தடை விதித்தது.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். சந்தர்ப வாதத்தின் ஒட்டுமொத்த உருவம் அமமுக.. பாஜக அடிவருடி அமமுக.. அமமுக பாஜகவை கடுமையாக விமர்சிக்குமா..?? பாஜகவின் தயவு அமமுகவிற்கு தேவை.. அமமுகவை போல் நாங்கள் இரட்டை வேடம் போடமாட்டொம் என தெரிவித்தார்

டெல்லி பல்கலைகழகத்தில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என கூறிய அரவிந்த் கேஜிர்வாலுக்கு கண்டனம். துரைமுருகன், கனிமொழி யை வருமான வரித்துறையிடம் காட்டி கொடுத்தது ஸ்டாலின், அதற்கு பழிவாங்கும் விதமாக தான் ஸ்டாலின் ஜனாதிபதியாவார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.’ என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button