Spotlightவிளையாட்டு

நாளை அரையிறுதி.. இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து புது வியூகம்!

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

முதல் அரையிறுதி நடைபெறவுள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு இதேபோன்று அரையிறுதியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து வீரர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கப்டில், டெய்லர் இந்த உலகக்கோப்பையில் இதுவரை சரியாக ஆடவில்லை. வில்லியம்சன், நீசம், கிராண்ட்ஹோம் போன்றவர்களின் பேட்டிங் மற்றும் போல்ட், பெர்குயூசன் போன்றவர்களின் பந்துவீச்சினால் தான் நியூசிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.

மேலும், இந்திய அணி வீரர்கள் வேகப்பந்து வீரர்களின் Slow பந்துகளை தொட அச்சம் கொள்கின்றனர். அது, நியூசிலாந்து அணிக்கு பெரும் பலமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

நாளை தெரிந்துவிடும், யார் இறுதி போட்டிக்கு செல்வது என…

Facebook Comments

Related Articles

Back to top button