
ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வருகிறது ’நேர்கொண்டபார்வை’. வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இதில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இதில் அஜித்குமார் வக்கீலாக நடித்திருக்கிறார்.
படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது அவர் நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.
இந்த படம் ஒரு மாஸ், ஆக்ஷன் படமாக, ரசிகர்களுக்கு சரியான தீணியாக இப்படம் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்டு மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது இப்படம். மேலும், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்றும் தெரிகிறது.





