
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் தான் ‘அசுரன்’.
இப்படத்தினை கோலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.
மஞ்சுவாரியர், பவன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளிவருகிறது.
இப்படத்திற்காக ரசிகர்கள் சார்பில் எந்த திரையரங்குகளிலும் பேனர், கட் அவுட் எதுவும் வைக்க வேண்டாம் என்று தனுஷ் ரசிகர் மன்ற தலைமையில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்திற்கு உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments





