
சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் யார் என்றால் அது சிம்பு தான். ஏதாவது ஒன்றில் மூக்கை நுழைப்பார், பின் அதற்கான பலனையும் வாங்கி கொள்வார்.
வந்தா ராஜாவாதா வருவேன் படத்திற்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற அறிப்பு வெளியானது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்படம் ட்ராப் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘மகா மாநாடு’ என்ற படத்தை தான் ஆரம்பிப்பதாக சிம்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதுவும் அறிவிப்போடு சென்றுவிட்டது. இப்படியாக சிம்பு தனது ரசிகர்களை பொறுமை இழக்க வைத்து விட்டார்.
வெளிநாட்டில் சில நாட்கள் தங்கி உடம்பை சிறிதளவு குறைத்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார் சிம்பு. சென்னை வந்து இறங்கியதும் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு போன் செய்து ‘நாம சேர்ந்து படம் பண்ணலாம்’ என்று கூறிவருகிறாராம்.
ஆனால், மறுபக்கமோ ‘அய்யோ சாமி எங்கள ஆள விடுங்க’ என்ற பதில் தான் வருகிறதாம்.




