
பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இரண்டாவது படைப்பாக உருவாக்கியிருக்கும் படம் தான் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியானது.
இதனை, பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியிருந்தார். படம் வெளியானது முதல் அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பை பெற்றது.
பலரும் இப்படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் கூறியிருந்தார்.
அனைத்து பத்திரிக்கைகளும் இப்படத்தை பாராட்டி வருகிறது. மக்கள் வருகையை கணக்கில் கொண்டு வெள்ளியன்று படம் வெளியான திரையரங்கை விட தற்போது அதிகமான திரையரங்குகள் குண்டு திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





