
மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் பரிதாபமாக போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், தூத்துக்குடி போராட்டத்தின்போது, வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது விநியோகத்துறை அதிகாரி கோபால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் ஆகியோரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தென்பாக்கம் காவல் சரகம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Facebook Comments