Spotlightசினிமாதமிழ்நாடு

சிறுமியை எரித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – மு க ஸ்டாலின்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவியை எரித்து கொலை செய்த முருகன் மற்றும் கலிய பெருமாள் இருவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button