Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனா முதல் லடாக் எல்லை வரை: இன்றைய முக்கியச் செய்திகள்…

லக அளவில் கொரோனா பாதித்ததோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும் – உலக சுகாதார நிறுவனம்.

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 673 தமிழக மீனவர்களை அழைத்துவர சிறப்பு கப்பல் இன்று புறப்படுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்.

கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 29 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளானதில் 6 பெட்டிகள் வெடித்து தீப்பிடித்தன.

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு.

விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டால் தனது கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது – கவுசல்யாவின் தந்தை சின்னசாமி.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் – தமிழக அரசு.

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை.

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் : பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன – கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசு முடிவு மாநில உரிமைகளுக்கு எதிரானது – முக.ஸ்டாலின்.

மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது – நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – ஏகே.விஸ்வநாதன், காவல் ஆணையர்.

புதுச்சேரி மத்திய சிறையில் மேலும் 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 4,399ஆக உயர்வு.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கொரோனா உறுதியானதால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,099ஆக உயர்வு.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது – இஸ்ரோ தலைவர் சிவன்.

ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள 35 கடற்படை வீரர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா தொற்று.

கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஆன்லைன் வகுப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் – உயர்நீதிமன்றம்.

ஊரடங்கு மீறல் : தமிழகத்தில் இதுவரை ரூ.15.17 கோடி அபராதம் வசூல் – காவல்துறை.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு மாவட்ட எல்லையில் அனுமதி மறுப்பு.

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சையையும் சேர்த்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா.

விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், காவலர்கள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவு – டிஜிபி சுற்றறிக்கை.

திருவாரூரில் 2 மருத்துவர்கள், 2 காவலர்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகரிப்பு.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் – அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு.

லடாக் எல்லையில் மீண்டும் சீன ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பது அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button