
கேரளாவில் எதையாவது ஒன்றை பேசி அதை சர்ச்சையாக்குவது தான் ரெஹனாவின் பழக்கம்.
அனைவரும் சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த போது, அங்கு மலை ஏற சென்றவர்தான் இந்த பாத்திமா ரெஹனா. அதன் பிறகு அவர் பணிபுரிந்து வந்த பிஎஸ் என் எல் நிறுவனத்தில் இருந்து இவரை நீக்கி விட்டனர்.
தற்போது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார் ரெஹனா. ஜூன் 19தேதி, ஒரு வீடியோ இவர் யூ-டியூப்பில் ஷேர் செய்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் படுத்துள்ளார்.. அந்த உடலில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைகிறார்கள். இதற்கு ’பாடி அண்டு பாலிடிக்ஸ்’ என்று பெயராம்.

படுக்கையறையில் பாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, சிறு குழந்தைகள் ஓவியம் வரைந்திருந்தனர்.. மேலும் தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது… பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.

இந்நிகழ்வை தொடர்ந்து கேரளாவில் சர்ச்சையும் வெடித்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது… ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.






