
நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் நிறுவனர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது இருட்டுக் கடை அல்வா தான். அந்த அளவிற்கு புகழ்பெற்றது.
இதன் உரிமையாளர் தான் ஹரிசிங். இவருக்கு சில நாட்களாக உடல் தொந்தரவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மனம் உடைந்த ஹரிசிங், தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Facebook Comments





