Spotlightசினிமாவிளையாட்டு

ஓய்வை அறிவித்தனர் தோனியும் & ரெய்னாவும்… ரசிகர்கள் அதிர்ச்சி!

ர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தனர்.

தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி… இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில்… “உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது. முழு திருப்தியுடன் நானும் உங்க வழியை தேர்ந்தெடுக்கிறேன்.

உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருவரும் ஒரே நேரத்தில் இப்படி அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button