
சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘தாதா 87’. இப்படத்தை விஜய்ஸ்ரீ ஜி இயக்கியிருந்தார்.
பாலியல் துன்புறுத்தல், திருநங்கையின் காதல், முதிர்ந்த காதல் என பல்வேறு கோணங்களில் உருவாக்கப்பட்ட இப்படம் பல்வேறு தரப்பினரால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா,நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் தான் பொல்லாத உலகின் பயங்கர கேம்…
இப்படத்திற்கு லியாண்டர் மார்ட்டி இசையமைத்து வருகிறார்.
இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடல் விஜயதசமி அன்று வெளியிடப்பட்டது.
அதன் ப்ரொமோ வீடியோவில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு இயக்குனர் ‘புரட்சி செல்வி’ என்ற பட்டத்தை கொடுத்துள்ளார்.
புரட்சி தலைவி ஜெயலலிதா என அழைக்கப்பட்டு வரும் வேளையில் புரட்சி செல்வி ஐஸ்வர்யா தத்தா என இயக்குனர் பட்டப் பெயர் வைத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்படத்தின் பாடல்களை
“டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது
பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியிடப்படும் இப்படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகிறது.
பொல்லாத உலகில் பயங்கர கேம்( PUBG) படம் தீபாவளி சரவெடியுடன் ஆரம்பித்து (இசை, ட்ரெய்லர்) பொங்கலின் போது கரும்பு சுவையுடன் (திரையரங்குகளில்) வெளியாக உள்ளது.
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என தொடங்கும் இந்த பாடல் இணையத்தில் பெரும் வைரல் ஆகி வருகிறது..





