
சுமார் 100 அடியாட்களை வைத்து தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார் நெப்போலியன். நெப்போலியனின் மனைவி பிரசவத்தில் ஆண் மகனை (சுல்தான்) பெற்றெடுத்து மறைகிறார்.
நெப்போலியன் மற்றும் 100 அடியாட்களின் அரவணைப்பில் வளர்கிறார் சுல்தான்.
மேற்படிப்பு படித்து மும்பையில் பணிபுரிந்து மீண்டும் தன் சொந்த ஊருக்கு வருகிறார் சுல்தான் (கார்த்தி).
போலீஸாரின் என்கவுண்டர் லிஸ்டில் 100 பேரும் சேர்க்கப்பட்டு அவர்களை கொல்லத் துடிக்கிறார் காவல்துறை உயர் அதிகாரி.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வில்லன் ஒருவனால், அக்கிராமமே விவசாயம் செய்ய முடியாமல் அனைவரும் கொல்லப்படுககின்றனர்..
உதவிக்கரம் ஏந்தி நெப்போலியனிடம் வருகின்றனர் அக்கிராமத்தினர். நெப்போலியனும் கிராமத்தை காப்பாற்றி தருவதாக உறுதி கூறுகிறார்.
இச்சமயத்தில் நெப்போலியன் இறந்துவிட, 100 அடியாட்களாக இருக்கும் அண்ணன்களை காப்பாற்றவும் அப்பா செய்து கொடுத்த சத்தியத்தின் படி அக்கிராமத்தை காப்பாற்றவும் கார்த்தி என்ன செய்ய போகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை…
சுல்தானாக மாறி மிரட்டி எடுத்திருக்கிறார் கார்த்தி. சுல்தான் அவதாரம் எடுக்கும் காட்சிகளில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறார் கார்த்தி. சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார் கார்த்தி. ராஷ்மிகாவுடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார்.
அழகான தேவதையாக காட்சியளித்து வந்த ராஷ்மிகா, இப்படத்தில் எவ்வித மேக் அப் இல்லாமல் நடித்திருக்கிறார். அநேக காட்சிகளில் கண்ணீர் சிந்துகிறார். ரசிகர்களை ஏற்றுக்கொள்வார்களா ?
வில்லனாக மிரட்டியிருக்கிறார்கள் கேஜி எஃப் வில்லன் ராம், தர்பார் வில்லன் நவாப் ஷா இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். நெப்போலியன், லால், யோகிபாபு, சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கறார்கள்.
கத்தி எடுத்தவர்களை கதிர் அறுக்க வைத்தவன் தான் இந்த சுல்தான்.. விவசாயத்தின் பெருமையை தூக்கி வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்… ஆங்காங்கே சில படத்தின் காட்சிகளும் டயலாக்குகளும் எட்டி பார்ப்பது சற்று எரிச்சலடைய வைத்திருக்கிறது. கார்த்தி உடல் அளவில் சற்று மிரட்டலான தோற்றத்தை கொடுத்திருக்கலாம்.
மற்றபடி படம் காண்போர்களை அசர வைத்திருக்கிறார் சுல்தான்.
சுல்தான் – பலே சுல்தான் பலே





