
பொன்ராம் இயக்கத்தில் அந்தோணிதாசன் இசையமைப்பில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, நந்திதா ஸ்வேதா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’.
படத்தை இயக்கியுள்ள பொன்ராம் இதற்கு முன் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் செம ஹிட் அடித்தது.
மிகவும் எளிமையான கதை, எளிமையான திரைக்கதை என குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்தன.
இதற்கு அடுத்தபடியாக மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவான ‘சீமராஜா’ பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்தது. பல கோடி ரூபாய் நஷ்டத்தில் சரிந்தது இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்.
இப்படத்தை தொடர்ந்து இயக்கப்பட்ட படம் தான் இந்த ‘எம்ஜிஆர் மகன்’. இப்படம் மீண்டும் பொன்ராமுக்கு வெற்றிப்படியை கொடுக்குமா என்பது ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது.
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.





