Spotlightவிமர்சனங்கள்

வீராபுரம் 220 – விமர்சனம் 2.25/5

நாயகன் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் நண்பர்கள் நால்வரும் ஊரில் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவரின் திருமணம் நண்பர்களின் போதைப்பழக்கத்தால் தடைபட்டு விடுகிறது.

இதனால் ஐந்து நண்பர்கள், நால்வராகின்றனர். அதில், அங்காடித் தெரு மகேஷ் நாயகி மேக்னாவின் பின்னால் சுற்றி திரிகிறார்.

இந்நிலையில், ஊரில் அவ்வப்போது மர்மமான முறையில் விபத்துகள் ஏற்பட்டு பலர் மரணமடைகின்றனர்.

அப்படியாக ஒரு விபத்தில் மகேஷின் தந்தையும் இறந்துவிடுகிறார். யார் அந்த விபத்தை ஏற்படுத்தியிருப்பார்.? நண்பர்களின் ஒற்றுமை என்னவானது.? இதில் வரும் எதிரிகள் யார் என்பதுக்கெல்லாம் பதில் இரண்டாம் பாதியில் இருக்கிறது.

நாயகன் மகேஷ், எதற்கு ஒரே மாதிரியான முகபாவனை வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. அங்காடித் தெரு படத்தில் இயக்குனர் வசந்தபாலன் அடித்து வேலை வாங்கியது போல், அனைத்து இயக்குனர்களும் அடித்து தான் வேலை வாங்க வேண்டும் போலிருக்கிறது. அதிலும் ஒரு காட்சியில் முகம் வீங்கிய நிலையில் இவரெல்லாம் ஹீரோவா என கேட்கும்படியாக நடிக்கிறார் மகேஷ்.

நடிப்புக்கென்று கொஞ்சம் மெனக்கெடுங்கல் மகேஷ் சார்.

ஒரு சில படங்களில் வந்து எட்டிப் பார்ப்பது போல் நாயகி மேக்னா இப்படத்திலும் எட்டிப் பார்த்து செல்கிறார். நண்பர்களாக வந்த நால்வரும் கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் தான்.

வில்லனாக வந்த சதீஷ் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளலாம். வில்லனுக்கே உரித்தான முகத்தோடு அதிர வைத்திருக்கிறார்.

இயக்குனர் செந்தில்குமார், கதைக்கருவில் கொஞ்சம் வீரியத்தை கொண்டு வந்திருக்கலாம்.

ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்களின் இசையில் பாடல்கள் இடைஞ்சல்தான். பெரிதாக ஈர்ப்பை கொடுக்கவில்லை.

கிராமத்தை மிகவும் அழகாக ஒளிப்பதிவு செய்து காட்டியிருக்கிறார் பிரேம்குமார்

Facebook Comments

Related Articles

Back to top button