
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம், மே 27 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது..
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாக்ஸ் ஆபீஸிலும் சிறந்த வெற்றியைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்புடன், இயக்குனர் விக்னேஷ் சிவனின்உருவாக்கமும், அனிருத்தின் துள்ளலான இசையும் திரையரங்குகளில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘O2’ திரைப்படம் விரைவில் இத்தளத்தில் வெளியாகுமென்று அறிவித்துள்ளது.
Facebook Comments





