Spotlightசினிமா

ரொம்ப மொக்கையா இருந்துச்சி; ஹிப் ஹாப் ஆதியின் கான்செட் பரிதாபங்கள்

இசையமைப்பாளர்கள் பலரும் தங்களை படங்களில் பிஸியாக வைத்துக் கொள்கிறார்களோ இல்லையோ உள்ளூர் வெளியூர் என்று கான்செட் செய்து அதில் வருமானம் பார்க்கத் துவங்கி விட்டனர்.

அப்படியாக தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து தங்களை கான்செட் கலாச்சாரத்திற்குள் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, அனிருத், ஏ ஆர் ரகுமான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஹிப் ஹாப் தமிழா ஆதி என இந்த லிஸ்ட் தொடர்கிறது.,

உள்ளூர்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கான்செட் செய்து பலரும் சில வருடங்களாக கல்லா நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை கான்செட் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்நிகழ்வை கண்டுகளிக்க குவிந்திருந்தனர். கான்செட் ஆரம்பமானது முதலே ரசிகர்களை உற்சாகப்படுத்த தவறியது ஹிப் ஹாப் ஆதியின் குழுவினர்.

இதனால், கான்செட் முடியும் வரை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த குழுவினர் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். ஒரு வழியாக சீக்கிரமாக முடிங்கப்பா வீட்டுக்காவது போகிறோம் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி டிக்கெட் வாங்கி சென்ற ரசிகர்கள் கடையில் ஏமாற்றமடைந்து வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button