
மகாலக்ஷ்மி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “சினிமா பேய்” ஆகஸ்ட் 22 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ப்ரியா சையோன் அறிமுகமாகிறார். அவருடன் ரசிகர்களை சிரிப்பால் கவர்ந்திழுக்கும் பவர் ஸ்டார், இம்மான் அண்ணாச்சி மற்றும் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தை இயக்கியுள்ளார் டி. கார்த்திகேயன், தயாரிப்பு – ஆர். விஸ்வஸ்வரன்.
“சினிமா பேய்” உலகளாவிய விநியோக உரிமையை எஸ். வினோத் குமார் தலைமையிலான 2S எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது அவர்களின் 7வது பட விநியோக முயற்சி ஆகும். இதற்கு முன்பும் பல வெற்றிப் படங்களை உலகளவில் வெளியிட்ட அனுபவம் கொண்ட 2S எண்டர்டெயின்மென்ட், “சினிமா பேய்” படத்தையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
பேய் – காமெடி கலந்த கதைக்களத்தில், சினிமா உலகின் நிழல் பக்கங்களை சுவாரஸ்யமாக சொல்லும் இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு சிரிப்பும் திகிலும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை – பிரபாகரன், ஒளிப்பதிவு – வினோத், எடிட்டிங் – மனோஜ் கார்த்திக்.




