
தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் ஸ்ரீராம் கார்த்தி. ஒருநாள் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது, அவரது பேஸ்புக் பக்கத்தில் பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வருகிறது.
அந்த மெசேஜை படித்து, தற்கொலை முயற்சியை கைவிடுகிறார் ஸ்ரீராம் கார்த்தி. அந்த பெண்ணிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே வருகிறார்.
ஒருகட்டத்தில், தனக்கு மெசெஞ்சர் மூலம், தன்னிடம் பேசிய பெண் யார் என்று தெரிய வர, அதிர்ச்சியடைகிறார் ஸ்ரீராம் கார்த்தி. அதன்பிறகு கதையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக ஸ்ரீராம்கார்த்தி, சக்திவேலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஸ்ரீராம். காதலியுடனான உரையாடலில் நம்மை நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார்.
காட்சிகளில் அழகு தேவதையாக காட்சி தந்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் மனீஷா ஸ்ரீ. துறுதுறுவென தனது பேச்சால் அனைவரையும் ரசிக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மனீஷா.
மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாத்திமா. சிறுது நேரம் என்றாலும், படம் முழுவதும் இவரது முக பிரதிபலிப்பு வந்து கொண்டே இருந்தது ரசிக்க வைத்தது.
நல்ல க்யூட்டான எக்ஸ்ப்ரஷன் கொடுத்து அனைவரையும் கட்டிப் போட்டிருக்கிறார் வைஷாலி ரவிச்சந்திரன்.
படத்தின் முதல் பாதி நல்லதொரு விறுவிறுப்பையும் பரபரப்பையும் கொடுத்துக் கொண்டே சென்ற படத்தின் கதை, இரண்டாம் பாதியில் ட்ராக் மாறி வேறு ஒரு பக்கம் சென்றது சற்று ஏமாற்றமடைய வைத்துவிட்டது.
பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டிய இரண்டாம் பாதியை மிகவும் மெதுவாக நகர்த்திச் சென்று விட்டார்.
கற்பனைக்கு அப்பாற்பட்ட கதை என்றாலும், திரைக்கதையின் வேகம் நம்மை மறக்க வைத்து கதையை படுவேகமாக கொண்டு சென்றிருக்க வேண்டும்.
மெசேன்ஞருக்குள் அமானுஷ்யம் என்பதை ஹாரரோடு சேர்ந்த ஒரு காதல் கதையாக நகர்த்தியிருந்தால் கதையின் மீதான சுவாரஸ்யம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒட்டியிருந்திருக்கும்.
அபுபக்கரின் இசையில் பின்னணி இசை படத்தோடு நாமும் நகர சற்று கைகொடுத்திருக்கிறது. பால கணேசனின் ஒளிப்பதிவு காட்சிப்பதிவுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தது.
இருந்தாலும், படத்தின் யூனிக்கான ஒரு கதைக்காக நிச்சயம் ஒரு முறை விசிட் அடிக்கலாம்..
Production: PVK Film Factory
Produced by: P. Vijayan
Written & Directed by: Ramesh Elangamani
DOP: Bala Ganesan R
Music: Abubakkar M
Editor: Prasanth R
Art: Balasubramanian
DI: Lixo Pixels
Colorist: John Sriram
Co-Director: Tha. Ganesan
Audiography: R. Krishna Moorthy D.F.Tech
Production Executive: A. Munish
Production Controller: Sumathi Prabakaran
PRO: Sathishwaran




