Spotlightசினிமா

வெற்றி முழக்கமிட்ட தமிழ்குமரன் தலைமையிலான ”தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி”!!

2026 – 29 ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைமைக்கான தேர்தலானது வரும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

வழக்கம் போல், இந்த தேர்தலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லா ஒன்றாக இருந்து வருகிறது. இந்த தேர்தலில் லைகா ஜி எம் தமிழ்குமரன் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறார்.

அவரைத் தொடர்ந்து, பொருளாளர் பதவிக்கு என் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் இரண்டு செயலாளர்கள் கொண்ட பதவிக்கு ஆர் ராதாகிருஷ்ணனும் கமீலா நாசரும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

தொடர்ந்து துணைத் தலைவர் ஆர் கே சுரேஷ் அவர்களும் கமலக் கண்ணன் அவர்களும் களத்தில் இறங்குகின்றனர்.

இணைச் செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயகுமார் போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு அழகன் தமிழ் மணி, சித்ரா லட்சுமணன், கபார், முரளி, ஆர் மாதேஷ், பிரவின் காந்த், ஞானவேல், பழனிவேல், பைஜா டாம், மகேந்திரன், ஜோதி, செந்தாமரை கண்ணன், முருகன், சாலை சகாதேவன், ஜெயசீலன், ராஜா, வி என் ரஞ்சித் குமார், தாய் சரவணன், பிரபதீஸ் சாம்ஸ், ராஜராஜன், ஏழுமலை, இசக்கி ராஜா, தவ சண்முகமணி உள்ளிட்ட 26 பேர் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றைய தினம், சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றூக்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் முன்னிலையில் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து விழாவில் பெப்சி சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்வோம் என அங்கு கூடியிருந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருமித்தமாக தங்களது முழக்கத்தைக் கொடுத்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button