
நடிகர்கள் & நடிகைகள் :எஃப் ஜே, அய்ரா, மோன பத்ரே, சாந்தினி தமிழரசன்
எழுத்து & இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம்
தயாரிப்பாளர்: எட்வர்ட்
வழங்குபவர் : “பாப்பின்ஸ் ஸ்டுடியோஸ்”
ஒளிப்பதிவாளர்: பாலா G ராமசாமி
இசை : அஷ்வின் கிருஷ்னா
படத்தொகுப்பு: ராஜ்குமார் – கோவை அபிஷேக்
அஸ்தினாபுரம் என்ற கிராமத்தில் கதை ஆரம்பமாகிறது. மோன பத்ரேவிற்கு இரண்டு மகள்கள். மூத்த மகளாக வருபவர் அய்ரா. அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். மோன பத்ரேவின் தாயார் பித்து பிடித்தவர் போல இருப்பதால், வீட்டின் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாட்கல் செல்ல செல்ல மோன பத்ரேவின் நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்க, ஊரில் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. இந்த அனைத்து அசம்பாவிதத்திற்கும் காரணம் மோன பத்ரே தான் என்றெண்ணிய ஊர் மக்கள் அனைவரும் ஒரு முடிவு எடுக்கின்றனர்.

அது என்ன என்பதே படத்தின் மீதிக் கதை. அதுமட்டுமல்லாமல், பல வருடங்களுக்கு முன்பு மோன பத்ரேவின் தாய்க்கு என்ன நடந்தது.? என்பதையும் இரண்டாம் பாதியில் கூறியிருக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க அதிக சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்திருப்பதால் காட்சிகளை கூறி, அதனை ஸ்பாயில் செய்ய விரும்பவில்லை. காட்சிகளுக்கு காட்சி அதிரடி நிறைந்த ஒளிப்பதிவு ஒலிப்பதிவு என மிரட்டலான தோணியில் படம் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். கதையில் சின்ன சின்ன குறைகள் இருந்தால், படம் எடுக்கப்பட்ட விதம் படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும்.
ஹாரர் த்ரில்லர் கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சரியான தீணி தான். வீட்டிற்குள் இருக்கும் அந்த மர்ம பெண் யார் என்று தெரியவரும் போது, கதை இன்னும் சூடு பிடிக்கிறது. பின்னணி இசையும் பின்னணி சத்தமும் நம்மை வேறு ஒரு உலகத்திற்குக் கொண்டு சென்று விடுகிறது.
படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருமே கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக ஜொலித்திருக்கின்றனர். சாந்தினியின் கடைசி நேர ஆட்டம், அழகானது.



