
சின்னத்திரை நடிகர் ஆதவன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.
ஆதவன் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் இருப்பதாகவும், தற்போது தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்த நடிகை ஹர்ஷினியுடன் தற்போது ‘Living Together’ உறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆதவன்,
“எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்காங்க. என் மனைவியுடன் பிரிந்து இருக்கேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹாசினியுடன் Living Together-ல் இருக்கேன். அதைச் சொல்ல எனக்கு வெட்கம் இல்லை. அது என் பெரிய பொண்ணுக்கும் தெரியும். அவங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டேன், நான் Living Together-ல் இருக்கேன் என்று.”
என்று கூறியுள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் ஆதவன் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் முடிவு ஏற்பட்டால், அது குறித்து அனைவரிடமும் வெளிப்படையாகத் தெரிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆதவனின் இந்தப் பேச்சு தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.





