
உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மாஸ்டர் பிளான்’. இப்படத்தை செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மர்மப் பெட்டியைச் சுற்றி நகரும் கதை!
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை வயதான பாட்டியும் சிறுவனும் கையில் ஏந்தியபடி நிற்கின்றனர். அவர்களைச் சுற்றி நிற்கும் குடும்ப உறுப்பினர்களின் முகங்களில் ஆச்சரியம், பயம் மற்றும் பதற்றம் கலந்த உணர்வுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட அம்சங்கள், இப்படம் வெறும் குடும்பக் கதையாக மட்டுமின்றி திரில் மற்றும் ஃபேண்டஸி கலந்த வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.
நடுத்தர குடும்பத்தின் வித்தியாசமான ஆசை!
தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை கொண்ட ஒரு நடுத்தர குடும்பம், அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே ‘மாஸ்டர் பிளான்’ சுவாரஸ்யமாக சொல்லவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.
தருண் விஜய் – அக்ஷரா ரெட்டி ஜோடி
இப்படத்தில் தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர்.
அவர்களுடன் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேனி, விழுப்புரம், செஞ்சியில் படப்பிடிப்பு
‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி, விழுப்புரம் மற்றும் செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
படக்குழு
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா
வசனம்: செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்
ஒளிப்பதிவு: K.S. பழனி
இசை: A.J. அலி மிர்சாக்
படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா
கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி
சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்
நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி
பாடல் வரிகள்: மோகன் ராஜன், கவிஞர் சாரதி
நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K
இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)





