Spotlightசினிமா

கமல்ஹாசனின் பிறந்தநாளில் மாஸ் அறிவிப்பு! ‘சண்டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ (Sandiyar) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியாகியுள்ள போஸ்டர்களில் கமல்ஹாசன் அடர்ந்த தாடி, கையில் துப்பாக்கி என மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார். காரின் அருகே அவர் இருக்கும் இந்தப் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

‘சண்டியர் சம்பவம்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

Facebook Comments

Related Articles

Back to top button