
லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற முடிதான நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாட்டியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி உதிர்வை எதிர்கொண்டதாக உருக்கமாகத் தெரிவித்தார். புற்றுநோயாளிகளின் வலியைத் தன்னால் உணர முடிவதாகவும், அவர்களுக்காக முடிதானம் செய்வது பாராட்டுக்குரிய செயல் என்றும் கூறினார்.
மேலும், சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக நல முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.





