Spotlightசினிமா

காட்டுக்குள் சிக்கிய நண்பர்கள்! இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் 27-ல் ரிலீஸ்!

இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் டிரைலர் நவம்பர் 16-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது.

நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், இரவை உற்சாகமாகக் கழிக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் எதிர்பாராத அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதே படத்தின் மையக்கதை.

இனிகோ பிரபாகருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்துள்ளார். சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், இனிகோ பிரபாகருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், படப்பிடிப்பு தொடங்கியபோது அறிமுகமில்லாதவர்களாக இருந்த தாங்கள், படம் முடிவதற்குள் நெருங்கிய நண்பர்களாக மாறியதாகவும் தெரிவித்தார்.

சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். எஸ்.என். பாசில் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் சார்பில் குகன் சண்முகம் வெளியிடும் ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button