
ஆரம்ப காலங்களில் தனது பார்வையிலேயே திரையில் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் T. R. ராஜகுமாரி. அவருக்கு பிறகு தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை மயங்க வைத்தவர் சில்க் சுமிதா. இவரது வருகைக்கு பிறகு இவர் இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். அவரது அகால மரணம் திரை உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவர் நடித்த படம் ஒன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு இதுவரை வெளிவராத படம் ராக தாளங்கள் வெளி வர உள்ளது. மாறுபட்ட வேடத்தில் சில்க் சுமிதா நடித்து உள்ளார். ராக தாளங்கள் படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ளார் திருப்பதி ராஜன். பொருளாதாரப் பிரச்சனை காரணமாக இப்படம் இதுவரை வெளிவரவில்லை. இதோ அதோ என்று தள்ளி போன சில்க் சுமிதா நடித்துள்ள ராக தாளங்கள் படம் செப்டம்பரில் வெளி வர உள்ளது. இப்படத்தில் சில்க் சுமிதா நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கே செல்வார்கள் என்பது உறுதி. இப்படத்தில் சில்க் சுமிதா அபிராமி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். படத்தின் முடிவு பார்ப்போரின் மனதை வருத்தி எடுக்கும் என்பது நிச்சயம். ஸ்ரீ தண்டாயுதபாணி மூவிஸ் சார்பில் தாத்தா கலை மூவிஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆர். திருப்பதி ராஜாஜீ இசையை வெளியிட பாண்டிச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சாலமன் பெற்றுக் கொண்டார்.
ட்ரைலரும் பாடல்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்றில்லாமல் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆர். திருப்பதி ராஜாஜீ அவர்களே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படம் வெளியிடும் தேதி அடுத்த வாரத்தில் தெரிவிக்கப்படுவதாக ஆர். திருப்பதி ராஜாஜீ தெரிவித்தார்.
Facebook Comments





