Spotlightசினிமா

அமேசான் பிரைமில் தமிழில் வெளியான ‘ஜிக்ரிஸ்’ – நட்பும் நகைச்சுவையும் கலந்த குடும்பப் படம்!

 

தெலுங்கில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவைத் திரைப்படமான ‘ஜிக்ரிஸ்’ (Jigris) தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரிஷ் ரெட்டி உப்பலா இயக்கியுள்ள இப்படம், கார்த்திக், பிரவீன், வினய் மற்றும் பிரசாந்த் ஆகிய நான்கு சிறுவயது நண்பர்களின் கோவா சாலைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பணம், செல்போன், ஜிபிஎஸ் எதுவுமின்றி பழைய மாருதி 800 காரில் பயணிக்கும் நண்பர்கள் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.

நகைச்சுவை, நட்பு, உணர்ச்சி என அனைத்தும் கலந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘ஜிக்ரிஸ்’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் நடித்த கிருஷ்ணா புருகுலா, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தெலங்கானா கத்தார் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

தெலுங்கு OTT ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் Amazon Prime Video தளத்தில் காணக் கிடைக்கிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button