
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படத்தின் விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ‘ முதலில் இயக்குனர் ராம் குமாரிடம் கதை ஏதாது இருந்தால் கூறும்படி கூறினேன். அப்போது உருவானது தான் ராட்சசன். ஆனால், அந்த படத்திற்கு நான் செட் ஆக மாட்டேன் என்று என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
பின் நிறைய ஹீரோக்களிடம் கதை சொல்லி, அவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டனர் இந்த கதையை. சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கதை என்னிடமே வந்தது.
காட்சிகள் குறைவாக இருந்தாலும் இப்படத்தில் நடிக்க சம்மதித்த அமலாபாலுக்கு நன்றி. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறாவிட்டால் ஆக்சஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் இன்னொரு படத்திலும் நடித்து கொடுப்பேன்.’ என்று கூறினார்.





