
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படம் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனரான இவரின் கதை அஜித்தை மிகவும் கவர்ந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் அஜித்.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருப்பதாக லேட்டஸ்ட்டாக வந்த செய்தி… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Facebook Comments