
GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ரசிகர்களைக் கவரும் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்துள்ளது.
ப்ளாக் ஹோல் எனும் மர்மமான உலகம், சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையிலான மோதல், மாயாஜால சக்திகள், எதிர்பாராத திருப்பங்கள் என ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி அம்சங்களை ஒன்றிணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தைகளைக் கவரும் மாயாஜாலக் காட்சிகள், கலகலப்பான நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு அனுபவத்தை ‘டிரோன்ஸ்’ வழங்குகிறது.
இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரி S.R. இசையமைக்க, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிட்டுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம், குழந்தைகளையும் குடும்பப் பார்வையாளர்களையும் கவர்ந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.




