
பிரபல நடிகை காஜல் அகர்வார் தயாரிப்பாளர் ஆகப் போகிறார் என சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகின . அந்த தகவல் உண்மை என்று தெளிவுபடுத்தும் விதத்தில் நேற்று காஜல் அகர்வால் வழங்கும் திரைப்படம் ஆரம்பமாகியுள்ளது.
டோலிவுட் திரைத்துறையில் பெல்லி சூப்புலு படத்தைத் தயாரித்த ராஜ் கந்துகுரியின் மகன் சிவா கந்துகுரி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். பரத்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பமானது. காஜல் அகர்வால் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ரோன்சன் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்திற்கு மனு சரித்திரா எனப் பெயர் வைத்துள்ளனர் .
Facebook Comments





