Spotlightசினிமா

மணிரத்னத்தை பார்ப்பது போல் உள்ளது – இயக்குனர் விஜய் ஸ்ரீ’யை பாராட்டிய சாருஹாசன்!

மிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நல்லதொரு நடிகராகவும் இன்றும் அசைக்க முடியா கலைஞனாக திகழ்பவர் சாருஹாசன்.

இவரை தாதா 87 படத்தில் 90 வயதிலும் நடிக்க வைத்தவர் இயக்குனர் விஜய் ஸ்ரீ. தனது கண் பார்வையிலே எதிரிகளை நடுநடுங்க வைக்கும் ஒரு தாதாவாக இப்படத்தில் நடித்திருந்தார் சாருஹாசன்.

திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் இப்படத்தினை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ’க்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இப்படத்தினைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா, அர்ஜுமன், பிக் பாஸ் ஜுலி நடிக்க ‘பப்ஜி’ என்ற படத்தினை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜய் ஸ்ரீ அவர்களுக்கு, சாருஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது, ‘ உங்களுடைய இயக்கத்தை பார்க்கும் போது எனக்கு இயக்குனர் மணிரத்னத்தை பார்ப்பது போல் உள்ளது. இன்னும் பல படங்களுக்கு உங்களுடைய வெற்றிப் பயணம் தொடர வேண்டும். இந்த கலையுலகில் நிச்சயம் நீங்கள் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்துவீர்கள். வாழ்த்துகள்’ என்று கூறினார் சாருஹாசன்.

’சாருஹாசன் ஐயா வாழ்த்தியதே என் வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். என் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நன்றி.’ என்று கூறினார் இயக்குனர் விஜய் ஸ்ரீ

Facebook Comments

Related Articles

Back to top button