
ஹச் வினோத் இயக்க தல அஜித் நடித்து வரும் படம் தான் ‘வலிமை’. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதிரடியான பல சண்டைக் காட்சிகள் இப்படத்தில் உள்ளதாம்.
மேலும், அஜித்திற்காககவே பிரத்யேகமாக பைக் ஸ்டண்ட் காட்சிகளும் படத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ஸ்பெஷல் பைக் ஒன்றும் அஜித்திற்காக வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜித் அந்த பைக்கில் ஸ்டண்ட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.
பல மாதங்களாக ‘வலிமை’ படம் பற்றி எந்த வித அப்டேட் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு பெரிய நிவாரணியாக அமைந்தது இப்புகைப்படம்.
Facebook Comments





