Spotlightவிளையாட்டு

அதானிக்கு எதிர்ப்பு; சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பு!!

ஸ்திரேலியா: சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கவிருக்கிறது. இதற்கு ஆஸ்திரேலிய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்கு கடனாக வழங்கவுள்ளது.

எஸ்பிஐ வங்கி, அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கக் கூடாது என்று பதாகைகளை ஏந்தி இருவர் மைதானத்துக்குள் புகுந்தனர்.

பின்னர், அவர்களை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர்.

இதனால், சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button