
இங்கிலீஷ்காரன், மகாநடிகன், சார்லி சாப்ளின் உட்பட்ட சுமார் 20 படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
தற்போது யோகி பாபு நடிப்பில் ‘பேய் மாமா’ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இவர் 2015 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஷக்தி சிதம்பரம், பாஜக’வில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலுக்கு ஷக்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். .இது குறித்து அவர் கூறும்போது, ‘நான் புரட்சி தலைவர் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, அம்மாவின் கரங்களில் உறுப்பினர் அட்டைப் பெற்றுக் கொண்டு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தொண்டனாக தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.





