
விஜயகாந்த் என்ற பெயருக்கு தமிழ் சினிமாவில் என்றுமே நீங்காத ஒரு இடம் உண்டு.
கேப்டன் விஜயகாந்த் பல வருடங்களாக நடிகர் சங்கத் தலைவராக இருந்து தமிழ் சினிமாவை கட்டிக் காத்தவர் என்ற புகழ் என்றும் உண்டு.
பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.
இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி 2018 இன்று காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.
Facebook Comments