Spotlightசினிமா

விஜய்யை ரொம்ப பிடிக்கும் – மிஸ் இந்தியா உபாசனா!

தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம் உபாசனா திரை அறிமுகம் என்னவோ முதலில் கன்னட படம் மூலமாகத் தான்.

சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமானவர் இவர்.. பின், டிராபிக் ராமசாமி படத்தில் நல்ல ஒரு ரோலில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார்.

இப்போது அவருடனான ஒரு நேர் உரையாடலை காணலாம்…

”டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது..

ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு…

எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு….

அதனால் பரதனாட்டியம் கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன்.

அப்பா அம்மா பிறந்தது வங்காளம் ..நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்… ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் உபாசனா. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போ என் கூட இருக்கிறார்.

நானும் சாப்ட்வேர் இஞ்சினீயர் தான்.

2015 ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன்.

நான் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும்.

சித்தார்த்தை ரொம்ப பிடிக்கும் .

நடிகர் விஜய்யின் டான்ஸை விரும்பி ரசிப்பேன்..நானும் டான்ஸர் என்பதால்..

எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது ..விஜய் டிவியில் ஒளிபரப்பான “வில்லா டூ வில்லேஜ்” நிகழ்ச்சி தான்.

நகர பெண்களை கிராமத்துக்கு அழைத்து சென்று நடத்திய நிகழ்ச்சி எனக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது..

அந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு real fighter என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது பெருமையாக இருக்கு..

அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் “கருத்துக்களை பதிவு செய் ” எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்.’ என்றார் உபாசனா RC.

Facebook Comments

Related Articles

Back to top button