
தமிழ் சினிமாவில் இயக்குனர் , தயாரிபபாளர், பாடகர், நடிகர் என பன்முக கலைகளை தன்னகத்தே கொண்டவர் தான் டி ராஜேந்தர்.
தமிழ் சினிமாவில் ஒரு பகுதி இவருடையது எனலாம். அந்த அளவிற்கு ரசிகர்களை கொண்டவர். இவர் சில தினங்களுக்கு முன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், கவலைக்கிடமாக சேர்க்கப்பட்டார். 4 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டி ராஜேந்தர், தற்போது தான் சீராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், டி ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல அவரின் மகனும் நடிகருமான சிலம்பரசன் முடிவு செய்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் சிங்கப்பூர் செல்லவிருக்கிறார்கள்.
Facebook Comments