
சாண்டல்வுட்டின் டாலி என்றே புகழ் பெற்றவர் நடிகர் டாலி தனஞ்ஜய். இவரது பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கவுன் டவுன் தொடங்கி உள்ளது. நடிகராக, தயாரிப்பாளராக பிரபலம் அடைந்துள்ள டாலி தனஞ்ஜய் பெரும் அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். “காமன் மேன் ஹீரோ” என பெயர் பெற்றுள்ள டாலி இந்த முறை பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
இந்த முறை பிறந்த நாளன்று ரசிகர்களுடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார். அந்த வகையில் டாலி தனஞ்ஜய் பிறந்த நாளும் ஆகஸ்ட் 23ம் தேதி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ரசிகர்களின் கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. சமூக வலைத்தளங்களில் போஸ்ட்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்த முறை பிறந்த நாளை டாலி உத்சவ் என்ற பெயரிலேயே திருவிழா போல கொண்டாட உள்ளனர் டாலி உத்சவ் என பெயரிட்டு ரசிகர் தேரை இழுக்கலாம் வாருங்கள் என டேக் லைன் வைத்துள்ளனர். பிறந்த நாளுக்கு இன்னும் 25 நாட்களே உள்ளன. இன்று முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். இந்த முறை நடக்கும் பிறந்த நாள் சிறப்பானது. 4 ஆண்டுக்கு பின் ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாட உள்ளர். டாலி சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அதனால் இந்த முறை நடக்கும் பிறந்த நாள் சிறப்பானது.
வெள்ளம், கொரோனா, புனித் மரணம் போன்ற காரணத்தால் நான்கு ஆண்டாக பிறந்த நாளை கொண்டாடவில்லை. ரசிகர்களையும் சந்திக்கவில்லை. அதனால் இந்த முறை பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட உள்ளத்தோடு, ரசிகர்களுடன் நேரத்தை செலவழிக்க உள்ளனர்.
ஜே.பி நகர் மைதானத்தில் கொண்டாட்டம்.
தனஞ்ஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் ஜே. பி நகர் மைதானத்தில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. மாநிலம் முழவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால் பெரிய மைதானத்தில் கொண்டாட தனஞ்ஜய் முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 22ம் தேதி இரவு முதலே கொண்டாட்டம் துவங்க உள்ளது. 23ம் தேதி ஜே. பி நகர் மைதானத்தில் தனஞ்ஜய் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை பெற உள்ளார்.
உணவு வசதி
வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே தனஞ்ஜய் அவர்களின் ஆசை. அதனால் டாலி உத்சவ் நிகழ்ச்சிக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் பெரிய அளவில் நடந்து வருகிறது. அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது