Spotlightசினிமா

இரு கதைகள், இரு இயக்குனர்கள்; இணையத்தை கலக்கும் “2D” இணையத் தொடரின் ட்ரெய்லர்!

மிழில் சோகம், தாகம், பகை, காதல் என பல உணர்வுகளை உள்ளடக்கி பல சினிமாக்கள், பல இணையத் தொடர்கள் வந்தாலும், அது பார்க்கும் ரசிகர்களை எதுவரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தரும் கதைகளில் தான் உள்ளது.

இங்கு இரு இயக்குனர்கள் உணர்ச்சி மற்றும் சோகம் என இரு உணர்வுகளையும் மையப்படுத்தி ஒரு இணையத் தொடரை இயக்கியிருக்கின்றனர்.

Dear என வைக்கப்பட்டுள்ள கதை உணர்ச்சியை மையப்படுத்தியும், Who killed my husband என வைக்கப்பட்டுள்ள கதை சோகத்தை மையப்படுத்தியும் உருவாகியுள்ளது. இந்த இரு உணர்வுகளையும் கொண்டு “2D” இணையத் தொடரை உருவாக்கியுள்ளனர் இரு இயக்குனர்களான DJ மற்றும் கணே ரமேஷ்.

முதல் கதையான “Dear”ல்

16 வயது நிரம்பிய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் காணாமல் போகிறாள். அந்த பெண் தொலைந்து போனாளா.? அல்லது கடத்தப்பட்டாளா.? என்பதை உணர்ச்சிமிக்க ஒரு கதையாக உருவாகியுள்ளதுதான் “Dear”

இரண்டாவது கதையான Who killed my husband ல்

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில், குடும்பத் தலைவன் சிலரால் கொலை செய்யப்படுகிறார். யார் அந்த கொலையை செய்தது என்ற தேடுதல் வேட்டையில் மனைவி களம் இறங்குகிறார். சோகம் கலந்த கதையாக உருவாகியுள்ளது தான் இந்த “Who killed my husband” தொடர்.

இத்தொடரின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பலராலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ட்ரெய்லர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

80நிமிடங்கள் கொண்ட இத்தொடர் , 4 பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dear தொடரை இயக்குனர் DJ இயக்கியிருக்கிறார். Who killed my husband இயக்குனர் கணே ரமேஷ் இயக்கியிருக்கிறார்.

இத்தொடரில் ப்ரியதர்ஷினி, யாசர், திடியன், அனு, செளமியா, கேயன், சரோ ராஜ்குமார், சித்ரா, மோகன், வேத்ய, கார்த்திக் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இசையை ஆதித்யா மற்றும் சரவணன் தீபன் கவனித்திருக்கிறார்கள்.

மகேஷ் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தொகுப்பு கணே ரமேஷ், நடன இயக்குனராக அருண், பாடலாசிரியராக ஹரிஹரன் உள்ளனர்.

TORTOISE MOVIES நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இத்தொடர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.

Facebook Comments

Related Articles

Back to top button