Spotlightசினிமா

பாமக எழுப்பிய சர்ச்சை; சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் “#WeStandWithSuriya”!!

யக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் “ஜெய் பீம்”. இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜெய்பீம் திரைப்படத்தால், குறிப்பிட்ட சமுதாயம் வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளதாக கூறி, நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அண்புமணி ராமதாஸுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலும் அளித்திருந்தார்.

இந்நிலையில், சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில், எங்களை தாண்டி தான் சூர்யா அண்ணனை தொடணும் என நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button