
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நன்றாக இருப்பதால் இரு மொழிகளில் படங்கள் அவருக்கு குவிகின்றன.
இவர் நடிப்பில் உருவான அயோக்யா வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட், கோலிவுட்டில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஷி கண்ணா,
’பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது சிறு வயதில் இருந்தே கிரஷ்.
கோலிவுட் சினிமாவில் எனது முதல் கிரஷ் அஜித் சார் தான். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன்.” என்றார்.
Facebook Comments





