Spotlightசினிமா

சினிமா கனவுக்கன்னி ‘சில்க்’ ஸ்மிதா மறைந்த நாள் இன்று..!

ப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரையும் ” சில்க் ஸ்மிதா” என்று யாவராலும் அறியப்பட்ட ஒப்பற்ற சினிமா கனவுக்கன்னி 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்து இதே 23 செப்டம்பர் 1996 இல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தி யால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார் அந்த பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது.

இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் அனைத்திலும் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்து இன்றளவும் கோலிவுட்டில் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button