Spotlightசினிமா

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி! கைதி, பிகில் நேருக்கு நேர் மோதல்!!

க்டோபர் 27 அன்று தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில் , கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் வரவிருந்த நிலையில் சங்கத் தமிழன் இந்த ரேசில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை சங்கத்தமிழன் படத்தை வெளியிடும் லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சற்று நேரம் முன்பு அறிவித்தார். மிகக்குறைந்த அளவிலான திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இதனால் பிகில் மற்றும் கைதி இரண்டும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்குகளை விஜய்யின் பிகில் கைப்பற்றும் என்று தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button