Spotlightதமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை மெயின் கேட் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் 17 இடங்களில், 74வது நாளாக போராட்டம் நடக்கிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் கேட்டினை நோக்கி குண்டினை வீசியுள்ளனர். ஆனால் அது கேட்டின் உள்பக்கம் விழுகாமல் வெளிப்பக்கம் விழுந்து பாட்டில் உடைந்து தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனை கண்ட தொழிற்சாலை காவலாளி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button