
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கு நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”. சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படம் நேற்று வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து திரையிட்ட திரையரங்குகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
படத்தின் இந்த வெற்றிக்கு காரணம் என்ன.? என்பதை பார்த்து விடலாம்..
கதாபாத்திரங்களின் தேர்வு
பக்கத்து வீட்டுப் பையனாக வசனங்கள் பேசி அசத்திய தனுஷ்
இப்படி ஒரு நண்பி நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்க வைத்த கதாபாத்திரமாக நித்யா மேனன்.
அனிருத்தின் பாடல்கள்
பாரதிராஜாவை சுற்றி வட்டமடிக்கும் காமெடிக் கொண்டாட்டங்கள்…
மனதை வருடிய பின்னணி இசை
திரைக்கதையின் நகர்வு
ஷார்ப்பான படத்தொகுப்பு
இது அனைத்தும் ஒரு சேர சேர்ந்து திருச்சிற்றம்பலம் என்றொரு படைப்பாக வெளிவந்து ஆட்டம் போட வைத்திருக்கிறது.