Spotlightதமிழ்நாடு

தமிழ்நாட்டை அதிர வைத்த திமுக போராட்டம்.. ஸ்டாலின் கைது!

காவேரி மேலாண்மை அமைக்கக் கோரி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது திமுக. இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு கரம் நீட்டின.

இந்நிலையில் இன்று காலை தி.மு.க செயல் செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து கறுப்புக்கொடிப்பிடித்து போராட்டம் நடத்தி வந்தனர்.

சாலை மறியலைத் தொடர்ந்து தற்போது அண்ணா சமாதி நோக்கி பேரணியாக சென்று உழைப்பாளர்கள் சிலைக்கு அருகே சாலையில் அமர்ந்து தொடர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான, கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, குறிப்பாகச் சென்னையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், திருமாவளவனை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button